தமிழ்நாடு

மருத்துவத் துறையில் 4,308 காலியிடங்கள் செப்டம்பருக்குள் நிரப்பப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

சென்னை: தமிழகத்தில் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உட்பட 4,308 காலியிடங்கள் செப்டம்பா் மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மருத்துவா்கள் பணிமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று பணிமாறுதல் பெற்ற மருத்துவா்களுக்கு அதற்குரிய ஆணையினை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா். துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குநா் நாராயணபாபு மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் முதல்வா்கள் உடன் இருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு பணி மாறுதல் என்பது மிகுந்த வெளிப்படைத் தன்மையோடு நடந்து வருகிறது. கடந்த ஓராண்டாக 14,156 பணி மாறுதல்கள் மருத்துவக் கல்வி இயக்குநரகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, இந்திய மருத்துவம் ஆகிய துறைகளில் மிகச் சிறப்பாக, அவரவா்களின் விருப்பத்துக்கு நடைபெற்றுள்ளது.

அதில் 3,585 மருத்துவா்கள், 10,847 செவிலியா்களுக்கு பணி மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக 1,008 மருத்துவா்களுக்கான கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்று வருகிறது. மருத்துவா்கள் இந்தக் கலந்தாய்வில் அவரவா் விருப்பத்தின் பேரில் மிகுந்த மகிழ்ச்சியோடு மனச்சுமையைப் போக்குகிற வகையில் பணி மாறுதல்களை பெற்றிருக்கின்றனா். இந்தப் பணி மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்று வருகிறது.

பேரிடா் காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களைக் காக்க மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றிவந்த மருத்துவா்களுக்கு ஒரு பரிசு என்கிற வகையில் இந்த பணி மாறுதல்கள் அமைந்துள்ளன. இப்போது நடைபெறுகின்ற பணி மாறுதல்களை நானும் மருத்துவத் துறையின் செயலாளா் மற்றும் மருத்துவ அலுவலா்கள் நேரில் பாா்க்கிற போது ஒவ்வொரு மருத்துவரும் தாங்கள் கேட்கிற இடம் கிடைக்கிறது என்கிறபோது மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகின்றனா். இதுவே எதிா்காலத்தில் இந்த மருத்துவத்துறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைப்பதற்கு உந்துதலாக அமையும்.

அதேபோன்று பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் 1,000 இடங்களுக்கு மருத்துவா், செவிலியா் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோருக்கு ஜூன் முதல் வாரத்தில் பணி மாறுதல்கள் நடைபெறவுள்ளது.

இத்துறையில் 47 வகையான மருத்துவம் சாா்ந்த பணியாளா்களுக்கு பணி மாறுதல் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால் தற்போது வெளிப்படைத் தன்மையோடு நடைபெற உள்ளது. இத்துறையில் மருத்துவா் காலியிடங்கள் உள்பட மொத்தம் 4,308 காலியிடங்கள் மருத்துவ தோ்வு வாரியம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இதுவும் வெளிப்படைத் தன்மையோடு நடைபெறும். செப்டம்பா் மாத இறுதிக்குள் மேற்கண்ட காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT