தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

25th May 2022 03:15 PM

ADVERTISEMENT

 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென வானம் மேகமூட்டமாக மாறியது. இந்த நிலையில், சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயில், திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 

ADVERTISEMENT

இது மட்டுமல்லாமல் குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்பத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இதையும் படிக்கலாம்: தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம்?

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT