தமிழ்நாடு

வரும் கல்வியாண்டில் பள்ளிகள் எவ்வாறு செயல்படும்? அன்பில் மகேஷ் விளக்கம்

DIN

சென்னை: வரும் கல்வியாண்டில் பள்ளிகள் கரோனா கால அட்டவணையைப் போல அல்லாமல் வழக்கம் போல செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், மாணவ, மாணவிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தகவல் ஒன்றையும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதாவது, வரும் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் 10, 11, 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மற்றும் வரும் 2022 - 23ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்வுகள் தொடங்கும் தேதிகள் குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார்.

அதன்படி, வரும் கல்வியாண்டில், தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2023 மார்ச், 13ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2023ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என்றும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் 3ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல்,  வரும் கல்வியாண்டிலிருந்து கரோனா கால அட்டவணை போல அல்லாமல், வழக்கம் போல பள்ளிகள் செயல்படத் தொடங்கும் என்ற முக்கிய அறிவிப்பினையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, பள்ளிகள் கடந்த ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் செயல்பட்டதால், மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், வரும் கல்வியாண்டில் வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT