தமிழ்நாடு

5 நாள் பயணமாக தமிழகம் வந்தார் வெங்கையா நாயுடு

25th May 2022 12:37 PM

ADVERTISEMENT

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு 5 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். 

அவரை சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்  ஆர். என்.ரவி, தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர் சிவ. வி. மெய்யநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்துள்ளார். 

ADVERTISEMENT

குறிப்பாக வருகிற மே 28 ஆம் தேதி சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு கருணாநிதியின் சிலையை திறந்துவைத்து சிறப்புரை ஆற்றுகிறார். 

சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு இடையே கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு வருகிறது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT