தமிழ்நாடு

மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

25th May 2022 11:13 AM

ADVERTISEMENT


கீழ்வேளூர் அருகே குருக்கத்தியில் மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் புதன்கிழமை காலை கவிழ்ந்த விபத்தில் மீனவப் பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். வாகனத்தில் இருந்த 7 மீனவப் பெண்கள் ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், சாமந்தான் பேட்டை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண்கள் 8 பேர் புதன்கிழமை அதிகாலையில் டெம்போ வாகனத்தில் மீன்களை ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்வதற்கு திருவாரூர் நோக்கி சென்றுள்ளனர். 

விபத்தில் சாலையில் கொட்டிக்கிடக்கும் மீன்கள்.

ADVERTISEMENT

அப்போது, கீழ்வேளூர் அருகே குருக்கத்தி பள்ளிக்கூடம் வரும்போது வாகனத்தின் பின் பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய வாகனத்தின் அச்சு முறிந்து தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதில், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த  கல்பனா(40) என்ற மீனவப் பெண்மணி தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், படுகாயம் அடைந்து உயிர்க்கு உயிர்க்கு ஆபத்தான நிலையில் இருந்த 7 மீனவப் பெண்களை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. 

 

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலை பார்த்து கதறி அழும் உறவினர்கள்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்வேளூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மீன் ஏற்றிச் சென்ற டெம்போ  வாகனம் கவிழ்ந்த விபத்தில் உயிர் இழந்த பெண்மணியின் உறவினர்கள் கதறி அழுதது காண்போர் அனைவரையும் கண் கலங்க வைத்த நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

இதையும் படிக்க | சிதம்பரம் அருகே லாரி மீது மினி லாரி மோதி விபத்து: குழந்தை உள்பட 4 பேர் பலி

ADVERTISEMENT
ADVERTISEMENT