தமிழ்நாடு

வரும் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு தேதிகள் வெளியீடு

25th May 2022 11:56 AM

ADVERTISEMENT

2023ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு வரும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் அறிவித்தார்.

இதையும் படிக்க | தமிழகத்தில் ஜூன் 13ல் பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் திறப்பு குறித்து இன்று காலை செய்தியாளர்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது, வரும் கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும், 2023ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 3ஆம் தேதியும், 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 14ஆம் தேதியும், 12ஆம் வகுப்பிற்கு மார்ச் 13ஆம் தேதியும் தொடங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT