தமிழ்நாடு

சிதம்பரம் அருகே லாரி மீது மினி லாரி மோதி விபத்து: குழந்தை உள்பட 4 பேர் பலி

25th May 2022 10:55 AM

ADVERTISEMENT

 

சிதம்பரம்: சிதம்பரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள கூத்தன்கோயில் பகுதிகள் சிதம்பரம் மயிலாடுதுறை சாலையில் நின்றுகொண்டிருந்தது. இந்த லாரியின் பின்பக்கத்தில் சேலத்திலிருந்து கிரானைட், மற்றும் டைல்ஸ் ஏற்றிவந்த மினி லாரி புதன்கிழமை அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், மினி லாரியில் பயணம் செய்த செல்வகுமார், கற்பகவல்லி, மிதுன் மற்றும் மினி லாரி ஓட்டுநர் நகுலேந்திரன் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரியின் பின் பக்கம் அமர்ந்திருந்த நான்கு பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாமலை நகர் போலீசார் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், போலீசார் விசாரணையில் உயிரிழந்தவர்களில் செல்வகுமார் சேலம் தம்மம்பட்டி டைல்ஸ் கடை உரிமையாளர் என்பதும், இவர் மயிலாடுதுறை மாவட்டம், மாதாணத்தில் உள்ள தனது மாமனார் துரைசாமி கட்டும் வீட்டிற்கு கிரானைட் மற்றும் டைல்ஸை மினி லாரியில் எடுத்துக்கொண்டு தனது மனைவியின் தங்கை கற்பகவல்லி மற்றும் தனது மகன் மிதுன் ஆகியோருடன் பயணம் செய்து உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: 4 சுவையுடைய அதிசய மாமரம் காய்க்கத் தொடங்கியது

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT