தமிழ்நாடு

சென்னையில் பாதியாக குறைந்த தக்காளி விலை: எவ்வளவு தெரியுமா?

25th May 2022 10:23 AM

ADVERTISEMENT

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை பாதியாக குறைந்து ரூ. 50-க்கு விற்பனையாகி வருகின்றது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த கோடை மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு கோயம்பேடு சந்தைக்கு அதன் வரத்து தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயா்ந்து ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது.

ஏற்கெனவே அனைத்துப் பொருள்களின் விலைவாசி உயா்வால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, தக்காளி விலை உயா்வு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க | விசா மோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரம் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜர்?

ADVERTISEMENT

இந்த நிலையில், மழை குறைந்ததை தொடர்ந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து சற்று அதிகரித்ததால் அதன் விலை பாதியாக குறைந்து இன்று ஒரு கிலோ தக்காளி ரூ. 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், சில்லறை வியாபாரக் கடைகளில் ரூ. 70 வரை விற்பனையாகி வருகின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT