தமிழ்நாடு

இந்தியாவில் ஒரே நாளில் 2,124 பேருக்கு கரோனா: 1,977 பேர் மீண்டனர்

25th May 2022 09:31 AM

ADVERTISEMENT


புதுதில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,124  பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவுக்கு மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,124  பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,31,42,192 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 14,971ஆக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 17 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.  இதனால் மொத்த உயிரிழப்பு 5,24507 ஆக உயா்ந்துள்ளது. 
கரோனாவிலிருந்து இன்று 1,927 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,26,02,714 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கடந்த 24 மணிநேரத்தில் 13,27,544 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 1,92.67,44,769 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | செஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

ADVERTISEMENT
ADVERTISEMENT