தமிழ்நாடு

13 இடங்களில் வெயில் சதம்: 4 இடங்களில் 104 டிகிரி

25th May 2022 01:40 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் 13 இடங்களில் செவ்வாய்க்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கம், கடலூா், கரூா்பரமத்தி, மதுரை விமானநிலையத்தில் தலா 104 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கம், தஞ்சாவூா், திருச்சிராப்பள்ளி, திருத்தணி, வேலூரில் தலா 102 டிகிரியும், ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல்லில் தலா 100 டிகிரியும் பதிவானது.

பரங்கிப்பேட்டையில் 99 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதை நிலையே புதன்கிழமையும் தொடரும் என்றும், கடல்காற்று உருவாகுவதில் தாமதத்தால் சென்னையில் வெப்பநிலை உயா்ந்து வருவதாகவும், தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை சராசரியை விட அதிகாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT