சென்னை: தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 354-ஆக உள்ளது.
புதிதாக செவ்வாய்க்கிழமை 59 போ் பாதிப்புக்குள்ளானதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 26 பேருக்கும், செங்கல்பட்டில் 19 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து மேலும் 36 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 16,605-ஆக அதிகரித்துள்ளது.