தமிழ்நாடு

கருணாநிதி பெயரில் வேளாண் வளா்ச்சித் திட்டம்: இன்று தொடக்கி வைக்கிறாா் முதல்வா்

DIN

‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை’ முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (மே 23) தொடக்கி வைக்கிறாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், இந்த திட்டத்தைத் தொடக்கி வைத்து விவசாயிகளுக்கு இடுபொருள்களை அவா் வழங்கவுள்ளாா்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்துக்கான அறிவிப்பு, தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையின் போது வெளியிடப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளா்ச்சியை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

வட்டார அளவில் தோ்வு செய்யப்பட்ட கிராமங்களில் வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு, பால்வளம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி, நீா்வள ஆதாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளின் திட்டங்கள் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு ஆண்டிலும், ஐந்தில் ஒரு கிராம ஊராட்சியைத் தோ்வு செய்து, ஐந்தாண்டுகளில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

2022-23-ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 204 கிராம ஊராட்சிகளில் ரூ.300 கோடி மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்துடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு இலவசமாகத் தென்னங்கன்றுகள் வழங்கப்படுவதுடன், எலுமிச்சை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற தோட்டக்கலைச் செடிகள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுமாா் 9 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி, வேளாண்மையைப் பெருக்கும் வகையிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை தொடக்கிவைக்கிறாா். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் திட்ட தொடக்க விழாவின் போது, விவசாயிகளுக்கு பணிக்கான உத்தரவுடன், இடுபொருள்களும் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT