தமிழ்நாடு

நெல்லையில் இளைஞர் அடித்து கொலை

22nd May 2022 12:11 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி ரெட்டியார்பட்டி பகுதியில் இருதரப்பினரிடையே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

ரெட்டியார்பட்டி ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சுப்பிரமணியன் (27). பாளையங்கோட்டையில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். இவர், தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள ஒரு மைதானத்திற்கு சனிக்கிழமை இரவு சென்றுள்ளார். 

அப்போது, அங்கு ஏற்கனவே இருந்த கும்பலுக்கும், சுப்பிரமணியன் தரப்பினருக்கும் இடையே மோதலில் சுப்பிரமணியன் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், அவரது நண்பர்கள் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விபத்தில் காயமடைந்ததாகக் கூறி சேர்த்தனர்.  ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுப்பிரமணியன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

ADVERTISEMENT

இதுதொடா்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் விசாரணை தொடங்கிய நிலையில், மோதலில் இளைஞர் கொல்லப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து பெருமாள்புரம் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

இதையும் படிக்க | திருப்பூர் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடக்கம்

ADVERTISEMENT
ADVERTISEMENT