தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெல்லும்: உதயநிதி

22nd May 2022 11:07 AM

ADVERTISEMENT


2024 மக்களவைத் தேர்தலில் திமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று (சனிக்கிழமை) இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வந்தார். சீதாராம் நகரில் இன்று காலை திமுக கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் கொடியேற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நலிந்த கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் திமுக மூத்த நிர்வாகிகளுக்கு அவர் பொற்கிழி வழங்கினார்.

ADVERTISEMENT

அப்போது பேசிய அவர், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக 40 இடங்களிலும் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், ஒசூர் எம்.எல்.ஒய். பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி. முருகன், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ். சீனிவாசன், மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், தலைமை செயற் குழு உறுப்பினர் சுகுமாரன், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஒசூரில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளவுள்ள உதயநிதி ஸ்டாலின், இளைஞர்கள், மாணவர்களுக்கு வேலை உத்தரவு ஆணையை வழங்குகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT