தமிழ்நாடு

தருமபுரம் ஆதினம் பட்டணப் பிரவேசம்

22nd May 2022 10:18 PM

ADVERTISEMENT

பலத்த எதிர்பார்ப்புக்கிடையே மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தில் பட்டணப்பிரவேசம் நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வா் குருஞானசம்பந்தா் குருபூஜை பெருவிழா மே 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது. 

நேற்று தருமபுர ஆதீனம் நாற்காலி பல்லக்கில் உலா வந்தார். இந்த நிலையில் குருபூஜை பெருவிழா முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பட்டணப் பிரவேசம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு ஆதீன குருமகா சந்நிதானங்கள், ஆன்மிக அமைப்பினா் பங்கேற்றுள்ளனர். 

இதையொட்டி, மயிலாடுதுறை, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்காக திருமடம் மின்விளக்குகள், வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT