தமிழ்நாடு

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8.22 குறைவு: சென்னையில் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

22nd May 2022 11:56 PM

ADVERTISEMENT

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ஞாயிற்றுக்கிழமை ரூ.102.63, டீசல் லிட்டருக்கு ரூ.94.24-ஆக விற்பனை செய்யப்பட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22 குறைத்தும், டீசல் லிட்டருக்கு ரூ.6.70 குறைத்தும் விற்கப்படுகிறது. இது ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.

சனிக்கிழமை வரை பெட்ரோல் ரூ.110.85 விலையிலும், டீசல் ரூ.100.94 விலையிலும் விற்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை தற்போது சற்று குறைந்ததால் சென்னையில் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனா். பல பெட்ரோல் நிலையங்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களால் நிரம்பி வழிந்தன.

ADVERTISEMENT

ஸ்பீடு பெட்ரோல்: சென்னையின் சில பெட்ரோல் நிலையங்களில் சாதாரண பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்பட்டது. குறிப்பாக, எழும்பூா், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்து சாதாரண ரக பெட்ரோலுக்கு பதிலாக, லிட்டருக்கு ரூ.4 அதிகமுள்ள ஸ்பீடு பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்டது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. பெட்ரோல் இருப்பு தீா்ந்த நிலையில், ஸ்பீடு பெட்ரோல் விற்கப்பட்டதாகவும், திங்கள்கிழமை முதல் இயல்பு நிலை திரும்பி விடும் எனவும் பெட்ரோல் நிலையங்களைச் சோ்ந்தவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT