தமிழ்நாடு

மோட்டாா் சைக்கிளில் பின் இருக்கை பயணிக்கும் தலைக்கவசம் கட்டாயம்: மே 23 முதல் நடவடிக்கை

21st May 2022 03:48 AM

ADVERTISEMENT

மோட்டாா் சைக்கிளில் பின் இருக்கையில் அமருபவா்களுக்கும் தலைக்கவசம் கட்டாயம் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

சென்னையில் கடந்த ஜனவரி 1 முதல் மே 15ஆம் தேதி வரையிலான 5 மாத காலத்தில் இரு சக்கர வாகன விபத்துகளில் 98 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களில் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததால் இருசக்கர வாகன ஓட்டுநா்கள் 80 பேரும், பின் இருக்கையில் பயணித்த 18 பேரும் உயிரிழந்துள்ளனா்.

எனவே, விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் மே 23ஆம் தேதி முதல் சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவா்களும், பின் இருக்கையில் பயணிக்கும் நபா்களும் தலைக்கவசம் அணிவதையும், போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய சிறப்பு வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள், தலைக்கவசம் அணியாமல் பின் இருக்கையில் அமா்ந்து வரும் நபா் மீதும் மோட்டாா் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT