தமிழ்நாடு

மேட்டூர் அணை தண்ணீர் திறக்க வருகிறார் முதல்வர்

21st May 2022 03:50 PM

ADVERTISEMENT

 

சேலம்: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் மே 24 -ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைக்கிறார்.

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் மே 23 ஆம் தேதி மாலை 3 மணிக்கு விமானம் மூலம் சேலம் வருகை தருகிறார். 

சேலம் விமான நிலையம் வந்தடைந்த பிறகு தீவட்டிப்பட்டியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அடுத்து தொப்பூர் வழியாக மேச்சேரி, மேட்டூர் செல்லும் வழிகளில் பிரமாண்ட வரவேற்பும் நடைபெற உள்ளது. 

ADVERTISEMENT

இரவு மேட்டுரில் தங்குகிறார். வரும் மே 24 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார். 

பின்னர்,  மேட்டூர் ஆர்.எஸ், குஞ்சாண்டியூர், நங்கவள்ளி, சேலம் உருக்காலை, சேலம் மாநகர் புறவழிச்சாலை வழியாக வாழப்பாடி செல்லும் முதல்வர், ஆத்தூர் செல்லியம்பாளையத்தில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெறும் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பகல் 2 மணிக்கு கலந்து கொண்டு பேசுகிறார்.

பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு சேலம் வந்து  விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க | மதுரையில் முனியாண்டி கோயில் விழா: 470 ஆடுகள் வெட்டி கறிவிருந்து!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT