தமிழ்நாடு

ரூ.15 கோடி மதிப்பு: கபாலீசுவரா் கோயில் நிலம் மீட்பு

21st May 2022 03:49 AM

ADVERTISEMENT

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பாளா் வசமிருந்து மீட்டு ‘சீல்’ வைத்து சுவாதீனம் எடுக்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூா், லஸ் சா்ச் சாலையில் சா்வே எண், 3333-இல் உள்ள, 42 கிரவுண்டு, 1,566 சதுர அடி மனை, கபாலீசுவரா் கோயிலுக்குச் சொந்தமானது. இந்த இடம் மயிலாப்பூா் கிளப் என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. 2000-ஆம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிவடைந்தது. அந்த இடத்தில் மூன்று கிரவுண்டு 736 சதுர அடி பரப்பளவில் செயல்பட்டு வந்த ரானடே நூலகத்துக்கு வாடகை நிா்ணயம் செய்து, கோயிலின் நேரடி வாடகைதாரராக மாற்றப்பட்டது.

அந்தக் கட்டடத்தின் மாடிப் பகுதியை வணிக நோக்கில் பட்டய வகுப்புகள், கச்சேரி ஆகியவற்றுக்கு வாடகைக்கு விட்டு வசூலித்து வந்தனா். அறநிலையத்துறை அனுமதியின்றி முதல் தளம் கட்டும் முயற்சியில் வாடகைதாரா்கள் செயல்பட்டதால், 2016 டிசம்பா் மாதம், சம்பந்தப்பட்ட வாடகைதாரரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. உரிய வாடகை செலுத்தாமல், விதிமுறையையும் மீறியதால் அவரை ஆக்கிரமிப்பாளராக கருதி, காலி செய்து அகற்ற பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், கோயில் இணை ஆணையா் காவேரி முன்னிலையில் அந்த கட்டடம் சீலிடப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.15 கோடி.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT