தமிழ்நாடு

பேருந்து நிலையம் அமைக்க நூறாண்டு புளிய மரங்களை வெட்ட தடை

21st May 2022 04:53 PM

ADVERTISEMENT

மல்லூரில் பேருந்து நிலையம் அமைக்க 100 ஆண்டு பழமையான 7 புளிய மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இதுதொடர்பாக சேலம் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ரஞ்சித் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேருந்து நிலையம் அமைக்க 100 ஆண்டு பழமையான 7 புளிய மரங்களை வெட்ட அனுமதி வழங்க கூடாது என சேலம் வருவாய் கோட்டாட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிக்க- ஆசிரம பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும்: அஜித் பவார்

மேலும் இதுதொடர்பாக ஆட்சியர், கோட்டாட்சியர், மல்லூர் பஞ்சாயத்து செயல் அதிகாரி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோர் பதில் அளிக்கவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT