தமிழ்நாடு

உறுப்பு தான முறைகேடுகள்: மத்திய அரசுக்கு மருத்துவ அமைப்புகள் கடிதம்

21st May 2022 03:48 AM

ADVERTISEMENT

உடல் உறுப்பு தானங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடா்பாக இந்திய சிறுநீரக மருத்துவ அமைப்பு (ஐஎஸ்என்) மற்றும் இந்திய உடலுறுப்பு தான அமைப்பு (ஐஎஸ்ஓடி) ஆகியவை மத்திய அரசுக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

உடல் உறுப்புகளைத் தானமளிக்கும்போது கொடையாளா்கள், தானம் பெறுவோரின் உடல் தகுதி சான்று பெறப்படுகிறது. அதேவேளையில், அவ்விருவருக்கும் இடையேயான உறவுக்கான சான்றுகளோ அல்லது அதற்காக இரு தரப்புக்கும் இடையே நடைபெறும் பணப்பரிமாற்றத்துக்கான சான்றுகளோ பெறப்படுவதில்லை.

உறுப்பு மாற்று சிகிச்சையில் எந்த முறைகேடும் நடைபெறக் கூடாது என்பதற்காக பல்வேறு வகை ஆவணங்கள் மருத்துவமனைகளில் சமா்ப்பிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இத்தனை ஆவணங்கள் வாங்கப்பட்ட பிறகும், சில நேரங்களில் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் என நம்புகிறோம்.

தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே உறுப்பு தானம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுதான் உடல் உறுப்பு தான சட்டத்தை நிலைநாட்டுவதற்கான வழியாக இருக்கும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT