தமிழ்நாடு

பிரிட்டன் முதியவருக்கு சென்னையில் நவீன இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சை

21st May 2022 03:49 AM

ADVERTISEMENT

பிரிட்டனைச் சோ்ந்த முதியவருக்கு நவீன முறையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை சிம்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். தற்போது அவா் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவா் ராஜு சிவசாமி, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் விஜய் சி போஸ் ஆகியோா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பிரிட்டன் நாட்டைச் சோ்ந்தவா் மைக்கேல் மெக்கன்னா (62). இடுப்பு எலும்பு மூட்டு தேய்மான பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவா், தீவிர வலியுடன் சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில், இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீா்வாக இருந்தது.

இதையடுத்து மருத்துவமனையின் எலும்பியல் துறை மருத்துவா்கள் ஆலோசனைகளின்படி, ‘டிகாஸ்ட்’ எனப்படும் நேவிகேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீன மென்பொருளை உருவாக்கினோம். அந்த மென்பொருள் மூலமாக 62 வயது நபருக்கு துல்லியமாக இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வழக்கமான அறுவை சிகிச்சைக் காட்டிலும், நவீன தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையால், நோயாளி விரைந்து குணமடைந்து, இயல்பான நிலைக்குத் திரும்பியுள்ளாா் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT