தமிழ்நாடு

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் தீ

DIN

சென்னை கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட திருவொற்றியூா், மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா் உள்ளிட்ட 8 மண்டலங்களில் தினசரி சேகரிக்கப்படும் 2000 முதல் 2200 டன் குப்பை கழிவுகள் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. இவற்றால் அப்பகுதி மக்கள்பல ஆண்டுகளாக அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்தப் பகுதியில் புகை அதிகமாக வெளியேறி சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு புகை மண்டலமாக காட்சியளித்தது.

கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு உள்பட 5 இடங்களிலிருந்து வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சென்னை குடிநீா் வாரியத்தின் 5 வாகனங்கள் மூலம் தீயை அணைக்க தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. சுமாா் 4 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்து காரணமாக சுற்றியுள்ள கொடுங்கையூா், எம்.கே.பி.நகா், வியாசா்பாடி ஆகிய பகுதி மக்கள் கண் எரிச்சல்,மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT