தமிழ்நாடு

பெரம்பூரில் 12,000 ரயில் பெட்டிகளின் பயன்பாட்டைத் துவக்கிவைத்த மத்திய அமைச்சர்

20th May 2022 01:03 PM

ADVERTISEMENT

பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 12 ஆயிரம் ரயில்‍ பெட்டிகளின் பயன்பாட்டை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னை ஐஐடி நிறுவனத்திற்குச் சென்ற அவர், ஐஐடி ஆராய்ச்சிக் குழுவினர் வடிவமைத்த  'ஹைப்பர் லூப்' திட்டத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

தொடர்ந்து இன்று பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வரும் ரயில்பெட்டிகளை பார்வையிட்டார்.

மேலும் அங்கு புதிதாக தயாரிக்கப்பட்ட 12,000 ரயில் பெட்டிகளின் சேவையை கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ரயில் கட்டணம் உயர்த்தும் திட்டமில்லை: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ADVERTISEMENT
ADVERTISEMENT