தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 112.77 அடியாக உயர்வு

20th May 2022 08:44 AM

ADVERTISEMENT


மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 112.77 அடியாக இருந்தது.

கடந்த ஒரு வார காலமாக காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 29,072 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று வெள்ளிக்கிழமை காலை  வினாடிக்கு 29,964 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. 

இதனால் நேற்று  வியாழக்கிழமை காலை 11 1.10 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 112.77 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணை நீர்மட்டம் 1.67 அடி உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

அணையின் நீர் இருப்பு 82.40 டி.எம்.சியாக உள்ளது. பருவ மலைக்கு முன்பாகவே அணையின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கியது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிக்க | ரயிலில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்தா? - ரயில்வே அமைச்சர்

ADVERTISEMENT
ADVERTISEMENT