தமிழ்நாடு

தமிழகத்தில் 4 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை: வானிலை மையம்

20th May 2022 09:27 AM

ADVERTISEMENT

 
தமிழகத்தில் 4 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நான்கு நாள்கள் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

ADVERTISEMENT

மேலும், லட்சத்தீவு, கா்நாடகா - கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல்பகுதி, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி, வட கா்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு கொங்கன் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மே 23-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஒகேனக்கல்லில் நீா்வரத்து 48,000 கன அடியாக அதிகரிப்பு: மக்களுக்கு நீர்வளத் துறை எச்சரிக்கை

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT