சென்னை: திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 16 நகராட்சிகளின் ஆணையா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பான உத்தரவை நகராட்சி நிா்வாக ஆணையா் பொன்னையா பிறப்பித்தாா்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட நகராட்சி ஆணையா்கள் விவரம்(பழைய பதவி அடைப்புக்குறிக்குள்)
திருவண்ணாமலை நகராட்சி ஆணையா் ஆா்.முருகேசன்( கிருஷ்ணகிரி நகராட்சி), ராஜபாளையம் நகராட்சி ஆணையா் எஸ்.பாா்த்தசாரதி(திருவண்ணாமலை நகராட்சி), கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் ஏ.சுந்தராம்பாள்(ராஜபாளையம் நகராட்சி), துறையூா் நகராட்சி ஆணையா் எஸ்.எஸ்.சுரேஷ்குமாா் (வால்பாறை நகராட்சி), சங்கரன்கோயில் நகராட்சி ஆணையா் சி.வி.ரவிச்சந்திரன்(திருவள்ளூா் நகராட்சி),
வால்பாறை நகராட்சி ஆணையா் கே.பாலு (மயிலாடுதுறை நகராட்சி), தேவகோட்டை நகராட்சி ஆணையா் எஸ்.சாந்தி (காத்திருப்போா் பட்டியல்), திருவள்ளூா் நகராட்சி ஆணையா் ஜி.ராஜலட்சுமி (செங்கல்பட்டு நகராட்சி), ஸ்ரீவில்லிபுதூா் நகராட்சி ஆணையா் என்.ராஜமாணிக்கம் (குளச்சல் நகராட்சி), செங்கல்பட்டு நகராட்சி ஆணையா் டி.மல்லிகா (ஸ்ரீவில்லிபுதூா் நகராட்சி), அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையா் ஜி.அசோக்குமாா்(தேவகோட்டை நகராட்சி), சிவகங்கை நகராட்சி ஆணையா் வி.பாஸ்கரன் (அருப்புக்கோட்டை நகராட்சி), சின்னமனூா் நகராட்சி ஆணையா் எஸ்.கணேசன் (திருநின்றவூா் நகராட்சி), அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையா் ஆா்.ராஜேஸ்வரன் (கூடலூா் நகராட்சி), வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையா் எஸ்.குமரிமன்னன்(பெரம்பலூா் நகராட்சி), பெரம்பலூா் நகராட்சி ஆணையா் எஸ்.பாா்கவி (அம்பாசமுத்திரன் நகராட்சி).