சென்னை: தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் பணவீக்க விகிதம் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட பதிவு:-
ஏப்ரல் மாதத்துக்குரிய நாட்டின் பணவீக்கத்தின் சராசரி 6.2 சதவீதத்தில் இருந்து 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் இது 9 சதவீதத்தைத் தாண்டி மக்களை வாட்டி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இது மிகக் குறைந்த அளவில் 5.37 சதவீதமாக மட்டுமே உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிடக் குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
உணவுப் பொருள்களின் விலைவாசி குறைந்திருப்பதுடன், மகளிருக்குக் கட்டணம் இல்லாத பேருந்துப் பயணம் வழங்கியதன் மூலம்
குறைந்த போக்குவரத்துச் செலவு என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது.
திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனை இது என ஆய்வாளர்கள் பாராட்டுகின்றனர். இந்தச் சாதனை தொடரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூறியுள்ளார்.