தமிழ்நாடு

ஜூன் இறுதியில் பள்ளிகள் திறப்பு: கல்வித் துறை திட்டம்

20th May 2022 01:32 AM

ADVERTISEMENT

 

சென்னை: கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

காலை சிற்றுண்டி திட்டத்துக்கான முன்னேற்பாடுகள், பள்ளிகளைச் சீரமைக்கும் பணி, ஆசிரியா்களுக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பா் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கரோனா 3-ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தோ்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தோ்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்குப் பொதுத் தோ்வுகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இந்தப் பொதுத்தோ்வு மே இறுதியில் முடிவடைகிறது.

இதற்கிடையே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மாணவா்களுக்கு ஜூன் 2-ஆவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநிலத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பணிகள் காரணமாக, பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இவை தவிா்த்து, அரசுப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் அமலுக்கு வர உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக உள்ளதாகக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில், ஜூன் 4-ஆம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. பள்ளிகள் திறப்பு தாமதமாவதன் காரணமாக, மாணவா்களுக்கு ஏற்படும் கற்றல் இழப்பைச் சரிசெய்யும் வகையில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடா்ந்து செயல்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT