தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம்

20th May 2022 05:03 AM

ADVERTISEMENT

 

சிதம்பரம்: தமிழக அரசின் அரசாணையின்படி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வியாழக்கிழமை மாலை முதல் சுவாமி தரிசனம் செய்தனர்.

கடந்த 2020}ஆம் ஆண்டு கரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து, சிதம்பரம் சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் கோயிலில் சித்சபை முன்புள்ள கனகசபை மீது பக்தர்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்வது தடை செய்யப்பட்டது. 

அதன் பின்னர், கரோனா பரவல் குறைந்தாலும், நடராஜர் கோயிலில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

இதையடுத்து, மீண்டும் கனகசபை மீது பக்தர்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி, தெய்வத் தமிழ்ப் பேரவை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்டவை போராட்டங்களில் ஈடுபட்டன.

இதைத் தொடர்ந்து, கனகசபை மீது பக்தர்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் கடலூர் மாவட்ட துணைத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 

இந்த வழக்கில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு வியாழக்கிழமை அரசாணை பிறப்பித்தது.

போலீஸôர் குவிப்பு:  தமிழக அரசின் அரசாணையை அமல்படுத்தும் வகையில், நடராஜர் கோயிலில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், காவல் கண்காணிப்பாளர்கள் சக்திகணேசன் (கடலூர்), ஸ்ரீநாதா (விழுப்புரம்), டிஎஸ்பிக்கள் ரமேஷ்ராஜ், சிலம்பரசன், கோட்டாட்சியர் கே.ரவி மற்றும் 300}க்கும் மேற்பட்ட போலீஸôர் கோயில் வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.
கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில், வழக்குரைஞர் ஜி.சந்திரசேகர் அப்போது போலீஸôரிடம் ஆட்சேப கடிதத்தை அளித்தார். 

அந்தக் கடிதத்தில் உயர் நீதிமன்ற உத்தரவில் கூறியுள்ளபடி, பொது தீட்சிதர்களின் கருத்துகளைக் கேட்காமல் ஒருதலைப்பட்சமாக தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அந்தக் கடிதத்தை கோட்டாட்சியர்  பெற்றுக் கொண்ட பிறகு, பக்தர்கள் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

வியாழக்கிழமை மாலை கோயில் நடை திறக்கப்பட்டவுடன் கோட்டாட்சியர் கே.ரவி முன்னிலையில், போலீஸôர் பாதுகாப்புடன் தெய்வத்தமிழ்ப் பேரவையினர் கி.வெங்கட்ராமன் தலைமையிலும், வழக்குரைஞர் எஸ்.ராஜூ தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோரும், விசிக மாவட்டச் செயலர் பால.அறவாழி தலைமையில் அந்தக் கட்சி நிர்வாகிகளும், காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜெமினி ராதா தலைமையில் அந்தக் கட்சியினரும்,  ஏராளமான பக்தர்களும் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT