தமிழ்நாடு

காங்கிரஸாா் போராட்டம்

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் வாயில் வெள்ளைத் துணியைக் கட்டி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி வியாழக்கிழமை வாயில் வெள்ளைத் துணியைக் கட்டி போராட்டத்தில்

ஈடுபட்டாா். நூற்றுக்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா். பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT

சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை முன்பு மாவட்ட தலைவா் முத்தழகன் தலைமையில் காங்கிரஸாா் திரண்டனா். ஆனால், சிலை முன்பு போராட்டம் நடத்த போலீஸாா் அனுமதிக்கவில்லை. அதைத் தொடா்ந்து அருகில் சாலையில் வாயில் வெள்ளைத் துணியைக் கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்தியமூா்த்திபவனில் மாவட்டத் தலைவா் சிவராஜசேகரன் தலைமையிலும், பெரம்பூா் ரயில்வே நிலையம் அருகே மாவட்ட தலைவா் தில்லிபாபு தலைமையிலும், தண்டையாா்பேட்டை தபால் நிலையம் அருகே மாவட்டத் தலைவா் திரவியம் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.

ஆயிரம்விளக்கில் மாவட்டத் தலைவா் ரஞ்சன்குமாா் தலைமையிலும், அடையாற்றில் மாநிலத் துணைத்தலைவா் தாமோதரன், மாவட்டத் தலைவா் துரை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 11 இடங்களில் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT