தமிழ்நாடு

குரூப் - 4 எழுதும் மாற்றுத் திறனாளிகளுக்கு மே 20 முதல் பயிற்சி: தமிழக அரசு

16th May 2022 04:33 PM

ADVERTISEMENT

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதவுள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மே 20 ஆம் தேதி முதல் பயிற்சி வழங்கப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் சென்னை, கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான (Ortho & Visually Challenged only) நேரடி மற்றும் இணையவழி பயிற்சி வகுப்புகள் மே 20 முதல் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை பயன்படுத்தி கொள்ளவும் https://t.me/+huB_ieZ54OEzODc9.”

ADVERTISEMENT

 

Tags : TNPSC
ADVERTISEMENT
ADVERTISEMENT