தமிழ்நாடு

ரூட்டு தல விவகாரம்: சென்னையில் ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட மாணவர்கள்

16th May 2022 12:27 PM

ADVERTISEMENT


சென்னை: ரூட்டு தல விவகாரத்தில், சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் குழு பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.

கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று காலை கல்லூரி நுழைவுவாயில் அருகே ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து, அவர்கள் விரைந்து வந்தனர்.

இதையும் படிக்க.. குழந்தையைக் கொன்ற சிறுவன் கைது; விசாரித்த காவலர்களுக்கு பேரதிர்ச்சி

காவல்துறையினரைக் கண்டதும் மாணவர்கள் தப்பியோடிவிட்டதாகவும், கல்லூரியின் பின்புற வாசல் அருகே இருந்த டிரான்ஸ்பார்மில் தொங்கிய பையில் இருந்து 8 கத்திகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருத்தணி ரூட், பூவிருந்தமல்லி ரூட் மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு கற்களால் தாக்கிக் கொண்ட சம்பவம் குறித்து 6 மாணவர்களை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT