தமிழ்நாடு

வடகலை, தென்கலை பிரச்னை: தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது; உயர் நீதிமன்றம்

16th May 2022 06:11 PM

ADVERTISEMENT

சென்னை: வடகலை, தென்கலை பிரச்னையை ஒழுங்குபடுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் பிரமோற்சவத்தில் வடகலை பிரிவில் வேதபாராயணம் செய்ய அறநிலையத் துறை அனுமதி மறுத்து, அறநிலையத் துறை உதவி ஆணையர் மே-14 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார் 

இந்தநிலையில் வடகலை, தென்கலை பிரச்னையை ஒழுங்குபடுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT