தமிழ்நாடு

முதல்முறையாக, வாட்ஸ்-ஆப் மூலம் விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம்

16th May 2022 05:34 PM

ADVERTISEMENT

சென்னை: கோயில் தேர் திருவிழா தொடர்பான அவசர வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஞாயிறன்று வாட்ஸ்ஆப் மூலம் விசாரணை நடத்தி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற திட்டமிடப்பட்டு, அறநிலையத் துறை ஆய்வாளரால் அனுமதி மறுக்கப்பட்ட தருமபுரியில் உள்ள ஸ்ரீ அபீஷ்ட வரதராஜ சுவாமி திருக்கோயிலின் தேர்த் திருவிழாவுக்கு அனுமதி கேட்டு அவசர வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நாகர்கோயில் சென்றிருந்த நிலையில், வழக்கை வாட்ஸ்ஆப் மூலம் விசாரித்தார்.

இதையும் படிக்க.. மலைப்பாம்பு முட்டைகளால் நின்றுபோன நெடுஞ்சாலைப் பணி: அடடா!

நீதிபதி நாகர்கோயிலில் இருக்க, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஓரிடத்திலும், அரசு வழக்குரைஞர் வேறொரு இடத்திலும் இருந்து வாதங்களை முன் வைத்தனர்.
 
வாதத்தின் நிறைவாக, தேர்த் திருவிழாவை நிறுத்தும் அதிகாரம் அறநிலையத் துறை ஆய்வாளருக்கு இல்லை. அவரது உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தேர்த் திருவிழாவை சுமூகமாக நடத்த வேண்டியது அரசின் கடமை. தேர்த்திருவிழாவின் போது மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT