தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட்: உயர்நிலை ஆலோசனைக் கூட்டம்

16th May 2022 05:08 PM

ADVERTISEMENT

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.

உலகளவில் மூளைக்கு அதிக வேலை தரும் ஆட்டமாக செஸ் உள்ளது. ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் செஸ் விளையாட்டில் வலிமை வாய்ந்தவையாக உள்ளன. ஏனைய விளையாட்டுகளுக்கு முத்தாய்ப்பான போட்டியாக ஒலிம்பிக் போட்டிகள் அமைந்துள்ளன. அதில் செஸ் இடம் பெறாத நிலையில், செஸ் ஒலிம்பியாட் என தனியாக கௌரவமிக்க போட்டி கடந்த 1924 முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சோவியத் யூனியன், ரஷியா அதிகமுறை தங்கம் வென்றுள்ளன. இந்தியா கடந்த 2020-இல் ஆன்லைன் முறையில் நடந்த போட்டியில் தங்கம் வென்றிருந்தது. இதனிடையே சா்வதேச செஸ் சம்மேளனம் ஃபிடே, அகிலஇந்திய செஸ் சம்மேளனம் ஆகியவற்றின் முயற்சியால் சென்னையில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல்வா் ஸ்டாலின் ஒப்புதல் அளித்தாா். இதற்காக ரூ.100 கோடியையும் தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

இதையும் படிக்க- பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் சிவசங்கர்

ADVERTISEMENT

வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் 2500-க்கு மேற்பட்டோா் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த செயலாளர்கள், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT