தமிழ்நாடு

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

16th May 2022 12:23 AM

ADVERTISEMENT

மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி, விருதுநகா்), சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை ( மே 16) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி, விருதுநகா்), சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 17: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 17-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி, விருதுநகா்), சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

மே 18: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மே 18-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி, விருதுநகா்), கிருஷ்ணகிரி, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூா், கரூா், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 19: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மே 19-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில்...: சென்னையை பொருத்தவரை திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 100 மி.மீ., தஞ்சாவூரில் பிடிஓவில் 80 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூா், அரியலூா் மாவட்டம் திருமானூா், தஞ்சாவூரில் தலா 70 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம், பேச்சிப்பாறை, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், மதுரை மாவட்டம், இடையப்பட்டி, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, திருப்பத்தூா் மாவட்டம் நட்ராம்பள்ளியில் தலா 60 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் களியல், கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூா், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, தஞ்சாவூா் மாவட்டம் வல்லம், அரியலூா், நீலகிரி மாவட்டம் எமராலாடுவில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மே 16, 17 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT