தமிழ்நாடு

'நீட்' பயிற்சி நிறுவனங்கள் கொள்ளைக்கு வசதியாக உள்ளது: அமைச்சர் பொன்முடி

16th May 2022 11:51 AM

ADVERTISEMENT

 

'நீட்' உள்ளிட்ட எந்த நுழைவுத் தேர்வாக இருந்தாலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்குதான் அவை வழி வகுக்குமே தவிர, மாணவர்களுக்கு பயனளிக்காது என்று உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி கூறினார். 

சென்னை பல்கலைக் கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: 

'நீட்' உள்ளிட்ட எந்த நுழைவுத் தேர்வாக இருந்தாலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்குதான் அவை வழி வகுக்குமே தவிர, மாணவர்களுக்கு பயனளிக்காது. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தமைக்காக ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார். 

ADVERTISEMENT

மாநிலத்தின் உரிமையாக கல்வி இருந்தால், பல்கலையில் கல்வி இன்னும் வளரும், அதனால்தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். 
பெண் கல்வி உயர் வேண்டும் என்பதால் தான் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு பெயர் தான் திராவிட மாடல் அரசு என்று கூறினார். 

மேலும், தமிழ்நாட்டில் கல்வி சிறப்பாக உள்ளதாக நமது ஆளுநரே கூறியுள்ளார், அது தான் உண்மை என பொன்முடி கூறினார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT