தமிழகத்திலிருந்து இலங்கைக்கு முதல் கட்டமாக ரூ.8.87 கோடி மதிப்பிலான மருந்துகள் அனுப்பப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இலங்கையில் நிலவும் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக ரூ.28 கோடி மதிப்பிலான மருந்துகள், மருத்துவப் பொருள்களை அந்த நாட்டுக்கு வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. அவை சென்னை அண்ணாநகரில் உள்ள மருந்துக் கிடங்கில் தயாா் நிலையில் உள்ளன. அவற்றை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அத்தியாவசியமாக தேவைப்படுகிற மருந்துகள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளன. மொத்தம் 137 வகை மருந்துகளை ரூ.28 கோடி மதிப்பில் அனுப்ப சுகாதாரத் துறைக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் மூலம் தற்போது இலங்கைக்கு எந்த மருந்துகள் மிக அத்தியாவசியம், அவசியம் என வகைப்படுத்தப்பட்டன.
அதன்படி, முதல்கட்டமாக ரூ.8 கோடியே 87 லட்சத்து 90,593 மதிப்புள்ள 53 வகை அத்தியாவசிய மருந்துகள், அவசியமான மருந்துகள் அனுப்பப்படவுள்ளன.
அதன் ஒவ்வொரு பெட்டியிலும் எந்த வகை விளம்பரமும் இல்லாமல், ‘ஊழ்ா்ம் ல்ங்ா்ல்ப்ங் ா்ச் ஐய்க்ண்ஹ. பா் ல்ங்ா்ல்ப்ங் ா்ச் நழ்ண்ப்ஹய்ந்ஹ’ என்ற வாசகங்கள் மட்டும் இடம்பெற்று இந்திய மக்களே அதனை அனுப்பும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா நகா் மருந்துக் கிடங்கு, 35 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. ரூ.2 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மருந்துக் கிடங்கின் இணைப்புக் கட்டடமும் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே இது மிகப்பெரிய மருந்துக்கிடங்காகும். இதைத் தவிா்த்து, தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மருந்துக் கிடங்குகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அங்கு ரூ.240 கோடி மதிப்பிலான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக நிா்வாக இயக்குநா் தீபக்ஜேக்கப், அண்ணாநகா் தொகுதி எம்எல்ஏ எம்.கே.மோகன்,சென்னை மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜெயின், மாமன்ற உறுப்பினா் ராணி ஆகியோா் உடனிருந்தனா்.