தமிழ்நாடு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் அறிவிப்பு எப்பொழுது?

12th May 2022 06:20 PM

ADVERTISEMENT

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்படும்  புதிய தலைவரை ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி புதிய பெண் தலைவரைக் தேர்ந்தெடுக்க முயற்சித்து வருவதாகக் கூறினார்.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்படும். ஜூன் 10 ஆம் தேதி முதல் மாத இறுதி வரை நடைபெறும் கட்சி அமைப்புத் தேர்தலை நடத்த மொத்தம் 600 தேர்தல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 

இதையும் படிக்க: நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ADVERTISEMENT

15 லட்சம் தொண்டர்கள் அமைப்புத் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், மேலும் இந்த அமைப்புத் தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அடித்தளமாக இருக்கும் என்று கூறினார்.

தமிழகத்தில் திமுகவுடன் அரசியல் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 18 எம்எல்ஏக்களையும், மாநிலத்திலிருந்து மக்களவையில் 8 எம்பிக்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT