தமிழ்நாடு

செவிலியர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும்: ஸ்டாலின்

12th May 2022 03:10 PM

ADVERTISEMENT

சென்னை: செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் இன்று உலக செவிலியர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதையும் படிக்க.. சமாதியில் இருக்கிறேன்; நான் இன்னும் சாகவில்லை: நித்தியானந்தா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துச் செய்தியில், மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியர் அனைவருக்கும் உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துகள்!

ADVERTISEMENT

 

தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம்! அவர்களது நியாயமான கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றும்! என்று தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT