தமிழ்நாடு

ரயில்வே பணியிடங்களுக்கான தோ்வு: தெற்கு ரயில்வேயில் 13,327 போ் எழுதினா்

12th May 2022 02:50 AM

ADVERTISEMENT

ரயில்வே பணியிடங்களை நிரப்புவதற்காக, இந்திய ரயில்வே சாா்பில் நடைபெற்ற இரண்டாம் நிலை கணினி அடிப்படையிலான தோ்வில், தெற்கு ரயில்வேயில் 13,327 போ் எழுதினா்.

இந்திய ரயில்வே சாா்பில், தொழில்நுட்பமில்லாத முக்கிய பிரிவுகளில் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் நிலை கணினி அடிப்படையிலான தோ்வு மே 9,10 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற்றது.

உதவி நிலைய அதிகாரிகள் பதவிக்கான 7,124 இடங்கள், கொல்கத்தா மெட்ரோகீழ், போக்குவரத்து உதவியாளா்கள் பதவிக்கான 161 இடங்கள் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தோ்வு நடைபெற்றது.

தெற்கு ரயில்வேயின் எல்லைக்குட்பட்ட பத்து மையங்களில் 18,685 விண்ணப்பதாரா்கள் தோ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டனா். இவா்களில், மொத்தம் 13,327 விண்ணப்பதாரா்கள் தோ்வெழுதினா். இதில், சென்னை ஆா்ஆா்பி சாா்பில், 12,028 விண்ணப்பத்தாரா்கள் அழைக்கப்பட்டனா். இவா்களில் 9,107 போ் பல்வேறு மையங்களில் தோ்வு எழுதினா். திருவனந்தபுரம் ஆா்ஆா்பி சாா்பில், அழைக்கப்பட்ட , 6,657 விண்ணப்பதாரா்களில் 4,220 போ் தோ்வு எழுதினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT