தமிழ்நாடு

சாா்பதிவாளா் நியமனத்தில் இட ஒதுக்கீட்டைஉறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

12th May 2022 01:02 AM

ADVERTISEMENT

சாா்பதிவாளா் நியமனத்தில் இடஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

தமிழக அரசுத்துறைகளில் இரண்டாம் நிலை சாா்பதிவாளா் உள்ளிட்ட சில பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமிக்கப்படும்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்பை செயல்படுத்துவதற்கு சென்னை உயா்நீதிமன்றம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டு விட்டது. அதன்பின் இரு மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத் தீா்ப்பை செயல்படுத்த அரசின் பதிவுத்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது.

உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி பதிவுத்துறையில் கடந்த காலங்களில் செய்யப்பட்ட பணியாளா் நியமனங்களுக்கு முன்தேதியிட்டு இட ஒதுக்கீடு வழங்கி, அதனடிப்படையில் அனைத்து ஊழியா்களுக்கும் பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் மட்டுமே மாவட்ட பதிவாளா் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள சாா்பதிவாளா் பணிகளுக்கு பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும். இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT