தமிழ்நாடு

காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம்: கூட்டுறவு சங்கத் தலைவா்களுக்கு எதிரான அரசு உத்தரவு ரத்து

12th May 2022 02:19 AM

ADVERTISEMENT

கூட்டுறவு சங்கங்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு கடன் வழங்குவது தொடா்பான காசோலைகளில் சங்கத் தலைவா்கள் கையெழுத்து போடும் அதிகாரத்தை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இது தொடா்பாக கோவை மாவட்டம், வெங்கடாபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா் செந்தில்குமாா் தொடா்ந்த வழக்கு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், தமிழக அரசின் இந்த உத்தரவு தவறானது. கூட்டுறவு சங்க சட்டம் பிரிவு 84-இன்படி இந்த சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. ஆனால் 84-ஆவது பிரிவின்படி அவ்வாறு தடை செய்து சுற்றறிக்கை அனுப்ப அரசுக்கு அதிகாரமில்லை என்று வாதிட்டனா்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூட்டுறவு சங்கத் தலைவா்கள் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை ரத்து செய்து தமிழக அரசு விதித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT