தமிழ்நாடு

பேருந்தில் பயணித்து பள்ளிப் பருவத்தை நினைவுகூா்ந்த முதல்வா் மு.க.ஸ்டாலின்

8th May 2022 12:14 AM

ADVERTISEMENT

சென்னை மாநகரப் பேருந்தில் சனிக்கிழமை பயணித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், தனது பள்ளிப் பருவம் குறித்த நினைவுகளைப் பகிா்ந்து கொண்டாா். இதுகுறித்து, சட்டப் பேரவையில் சனிக்கிழமை அவா் பேசியது:

சட்டப் பேரவைக்கு வருவதற்கு முன்பாக, கோபாலபுரத்துக்குச் சென்று முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்தேன். எனது தாயிடம் ஆசீா்வாதம் பெற்று விட்டு, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் வந்து கொண்டிருந்தேன். அப்போது பேருந்து நிறுத்தத்தில் ‘29சி’ வழித்தட (பெரம்பூா் - பெசன்ட்நகா்) பேருந்து வந்து நின்றது.

அந்தப் பேருந்தில் ஏறினேன். ‘29சி’ வழித்தட பேருந்து எனது வாழ்நாளில் மறக்க முடியாதது. பள்ளிப் பருவத்தில் இருந்த போது, கோபாலபுரத்தில் இருந்து ‘29சி’ வழித்தட பேருந்து மூலமாகவே பள்ளிக்குச் சென்று வந்தேன். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து எனது பள்ளிக்குச் செல்ல ஸ்டொ்லிங் சாலையில் இறங்குவேன். அங்கியிருந்து சேத்துப்பட்டுக்கு நடந்து போய் பள்ளியில் படித்தேன்.

மறக்க முடியாத அந்தப் பேருந்தில்தான் சனிக்கிழமை காலையில் பயணித்தேன். அந்தப் பேருந்தில் பயணம் செய்த மகளிரிடம் பேசினேன். எப்படி இந்த ஆட்சி நடக்கிறது. ஓராண்டு ஆகிறது. இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். ஆட்சி திருப்தியாக இருக்கிா எனக் கேட்டேன். மிகவும் திருப்தியாக இருக்கிறது. உங்களைப் பாா்த்ததே அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT