தமிழ்நாடு

திமுகவின் ஓராண்டு ஆட்சி ஏமாற்றம்: எல். முருகன்

8th May 2022 08:37 AM

ADVERTISEMENT


திமுகவின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:

"திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பது எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களுக்கு ஏமாற்றத்தினை மட்டுமே கொடுத்துள்ளது.

இதையும் படிக்க115 கோடி பெண்கள் பயன்பெற்ற இலவசப் பேருந்து பயணம்

ADVERTISEMENT

நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்பதை மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் தெளிவாக தெரிவித்துள்ளார். அதைப்போல் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலக்கரியினை வழங்கிதான் வருகிறது.

தமிழகத்தில் விசாரணைக் கைதி மரணம் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. உக்ரைன், ரஷியா போர் எதிரொலிதான் சமையல் எரிவாயு-வின் விலை உயர்வுக்குக் காரணம்" என்றார் அவர்.

Tags : DMK
ADVERTISEMENT
ADVERTISEMENT