தமிழ்நாடு

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர் ராஜபட்ச

5th May 2022 08:32 PM

ADVERTISEMENT

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள தமிழக அரசுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச நன்றி தெரிவித்துள்ளார். 

இலங்கையில் நிலவி வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். 

இதையும் படிக்க | ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாத சிறைதண்டனை: 2017ஆம் ஆண்டு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

இந்நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவ இந்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்திய அரசின் மூலம் இலங்கைக்கு உதவ மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச நன்றி தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் சார்பில் இலங்கைக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அரசுக்கும் இலங்கை மக்கள் சார்பில் நன்றி.  இலங்கை பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டு பிரச்னையாக பார்க்காது உதவிய தங்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க | அதிகரிக்கும் வெப்பநிலை: பிரதமர் மோடி ஆலோசனை

முன்னதாக நடப்பாண்டு ஜனவரி முதல் இதுவரை இலங்கைக்கு இந்தியா 3 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.23,000 கோடி) கடனுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT