தமிழ்நாடு

பேருந்துகளில் 5 வயது வரை குழந்தைகளுக்கு இலவச பயணம்

5th May 2022 03:52 PM

ADVERTISEMENT

சென்னை: தமிழகத்தில் இனி ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார்.

இதையும் படிக்க.. ம.பி.யில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ‘நூா்ஜஹான்’ மாம்பழம்!

அதில், தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை / பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை அறிமுகப்படுத்துதல்.

ADVERTISEMENT

பயண கட்டணச் சலுகை அனுமதி சீட்டுகளை வலைதளம் வாயிலாக வழங்குதல்.

சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல்.

அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும் பராமரிப்பதற்காகவும் அரசு நடமாடும் பணிமனைகளை உருவாக்குதல்.

அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் அமைக்கப்படும்.

பேருந்து முனையங்களில் இணையவழி பயணியர் தகவல் ஏற்பாட்டு முறை காட்சிப்படுத்தப்படும்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பயணச்சுமைப் பெட்டிகளை வாடகைக்கு விடுதல்.

இணையவழிப் பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழிப் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சட்டணச் சலுகை.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். (தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT