தமிழ்நாடு

அதிக வெப்பம்: தலைவாசல் அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் நோய்த்தொற்று அபாயம்

5th May 2022 09:22 AM

ADVERTISEMENT

 

சேலம்: அதிக வெப்பம் காரணமாக, தலைவாசல் அருகே ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதால் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதால் தூய்மைப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் சுமார் 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக அதிகளவில் நீர் பிடிப்பு ஏற்பட்டு அதில் அளவில் மீன்கள் உற்பத்தியாகி உள்ளது, இந்த உற்பத்தியான மீன்களை அரசு மூலம் டென்டர் விடப்பட்டு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது அப்பகுதியில் வெப்பம் அதிகளவில் காணப்படுவதால் ஏரியில் உள்ள நீர் சூடேறி அதிக அளவில் மீன்கள் இறந்துள்ளது, ஏரியின் அருகாமையில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்ட போது இந்த ஏரியில் உள்ள மீன்கள் இறந்துள்ளதால் அதிக அளவில் துர்நாற்றம் வீசியும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமாக உள்ளது. 

மேலும் இந்த ஏரிக்கு இங்குள்ள பின்னிங் மற்றும் சேகோ ஆலையில் உள்ள கழிவு நீர் ஏரியில் கலப்பதாகவும் இதனால் மீன்கள் இறப்பதாகவும் இது குறித்து அரசு அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் வழியாக செல்லும் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.


இதையும் படிக்க | நாமக்கல்: வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை

ADVERTISEMENT
ADVERTISEMENT