தமிழ்நாடு

ஹஜ் புறப்பாட்டு இடமாக சென்னை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் நன்றி

5th May 2022 01:06 PM

ADVERTISEMENT

ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாகச் சென்னை பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தமைக்காக மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாகச் சென்னை பரிசீலிக்கப்படும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்  முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க.. ம.பி.யில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ‘நூா்ஜஹான்’ மாம்பழம்!

இதற்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், 2023-இல் இருந்து ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாகச் சென்னை பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளமைக்காக  மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அவர்களுக்கு நன்றி.

ADVERTISEMENT

 

இனி வரும் காலங்களில், எந்தச் சூழ்நிலையிலும் ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாகச் சென்னை இருப்பதை உறுதிசெய்யுமாறு மத்திய அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT